துப்பறிவாளன் 2 க்கும் ப்ரோமோ கொடுத்த பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி -மீண்டும் வைரலாகும் துப்பறிவாளன் 2 புகைப்படங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 இன் டிஆர்பி மன்னனாக திகழ்கிறார் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி.

திரையுலகில் நீண்ட காலமாக சுரேஷ் இருந்த போதும், பிக் பாஸ் நிகழ்ச்சி நொடிப்பொழுதில் அவரை பிரபலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் விஷாலின் துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் சுரேஷ். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அப்போது வெளியாகியிருந்த போதும் யாரும் சுரேசை கவனத்தில் எடுக்கவில்லை.

இவ்வாறிருக்க இப்போது மீண்டும் துப்பறிவாளன் 2 இன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. ஆனால் இம்முறை விஷாலுக்காகவோ இல்லை மிஸ்க்கினுக்காகவோ இல்லாமல் , சுரேஷ் எனும் தனிமனிதன் ஒருவருக்காக வைரலாகி வருகிறது.

இதோ அந்த வைரல் புகைப்படங்கள் உங்களுக்காக…..

Thupparivaalan 2 photos
Thupparivaalan 2 photos