இந்தியன் 2 – இயக்குனர் ஷங்கருக்கு கமல் கொடுத்த ஐடியா

ஷங்கர் இயக்கத்தில் உருவெடுத்த இந்தியன் 2 படப்பிடிப்பு பல காலமாக கிடையா கிடப்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. கமலின் அரசியல், படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கொரோனா லாக்டவுன் என பலத் தடங்கல்கள் வரிசையாக வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் இப்போது கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இதனால் இயக்குனர் ஷங்கர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது கமல் தான் ஒரு 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். நடிகர் நடிகைகள் அதிகமாக இல்லாத காட்சிகளைப் படமாக்குங்கள் என ஷங்கரிடம் சொல்ல அவரும் உற்சாகமாகியுள்ளார். ஆனால் தயாரிப்பு தரப்பிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இப்போதைக்கு இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்படுவது கஷ்டம்தான் என சொல்லப்படுகிறது.

indian 2 updates