விஜய்க்காக எழுதப்பட்ட கதையை அஜித்துக்கு மாற்றியமைத்த இயக்குனர்!

கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ என்ற படத்தை தயாரித்த ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தான் அஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ajith latest news

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும், ஏற்கனவே விஜய்க்கு கூறிய கதையை தான் சிறிது மாற்றம் செய்து அஜீத்துக்காக தயார் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.