செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் கெளதம் கார்த்திக்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்த படம் ’காதல் கொண்டேன் 2’ என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென செல்வராகவன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தனுஷ் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் உடனடியாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், அதனால் அவரது படத்தை இயக்கும் முன்னர் குறுகிய காலத்தில் ஒரு திரைப்படம் எடுக்க செல்வராகவன் முடிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்து கௌதம் கார்த்திக் இடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

செல்வராகவன் மற்றும் கௌதம் கார்த்திக் இணையும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் தான் கௌதம் கார்த்திக் நடிக்கின்றாரா? அல்லது இது வேறு கதையா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Dhanush latest news