ஜிவி.பிரகாஷ் – ராகவா லாரன்ஸ் இணையும் புதிய படம் அறிவிப்பு!

பிரபல நடிகர், நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி முடித்துள்ள ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது, இதனை அடுத்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகிர்தண்டா’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த ‘பைவ் ஸ்டார்’ கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் பணத்தை வாங்கி தான் அவர் கொரோனா நிதியாக பொதுமக்களுக்கு கோடிக்கணக்கில் அளித்தார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படம் குறித்த அறிவிப்பு தற்போது அதிரடியாக வெளியாக உள்ளது. ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 7வது திரைப்படமான இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் வரும் 29 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் இணையும் இந்தப் படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Raghava Lawrence gv prakash latest news