தனது வருங்கால கணவருடன் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக எந்த அறிவிப்பும் இன்றி நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்திருந்தது.

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாரிஸ் பாரிஸ், மற்றும் இந்தியன் 2-ம் பாகம் ஆகியபடங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அவரைப்பற்றி அவ்வப்போது பல திருமண செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது தான் காஜல் அகர்வாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற உள்ளது.

கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை காஜல் திருமணம் செய்ய உள்ள இந்த நிலையில் முதன்முதலாக தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை நடிகை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

Kajal Aggarwal latest updates
Kajal Aggarwal latest updates
Kajal Aggarwal latest updates