வடிவேலுவின் முதலாவது வெப் தொடர் பணிகள் தொடங்கியது

தமிழ் திரையுலகில் பல கதாநாயகர்களை விடவும் அதிகளவிலான ரசிகர்களை கொண்டவர் வைகைப்புயல் வடிவேலு.

இம்சை அரசன் படத்தில் உண்டான முரண்பாடுகள் காரணாமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்த வைகை புயல் மீண்டும் கமலின் தலைவன் இருக்கின்றான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் சுராஜ் சமீபத்தில் நடிகர் வடிவேலுவை சந்தித்து புதிய திரைப்படத்துக்கு கதை சொல்லியுள்ள நிலையில், அக்கதையை திரைப்படமாக அன்றி, வெப் தொடராக இயக்குமாறு இயக்குனரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் வடிவேலு.

இதனை தொடர்ந்து கதையை 9 எபிசோட்கள் கொண்ட தொடராக உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுராஜ். மேலும் தொடரை தயாரிப்பதற்கு அமேசான் பிரைம் மற்றும் ஹாட்ஸ்டாரை இயக்குனர் தற்போது அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vadivelu

Vadivelu’s debut web series