எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான் – நடிகர் ரமேஷ் திலக் உற்சாக பதிவு

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ரமேஷ் திலக்.

அதனை தொடர்ந்து விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருக்கும் இவரின் மனைவி நவாலட்சுமிக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இத்தனை உற்சாகமாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ள நடிகர் ரமேஷ் திலக் “எனக்கு தலைவன் பிறந்து இருக்கிறான்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Ramesh Thilak latest updates