‘மிஸ் இந்தியா’ என்பது ஒரு பட்டம் அல்ல அது ஒரு பிராண்ட்’ – கீர்த்தி சுரேஷு

கீர்த்தி சுரேஷ் நடித்து ஓடிடி மூலமாக வெளியாகவுள்ள மிஸ் இந்தியா படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பை ஏட்படுத்தியுள்ளது.

இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது மிஸ் இந்தியா திரைப்படம்.

பாரம்பரியமான டீ விற்பனையை உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற்ற முயலும் எம்பிஏ படித்த சம்யுக்தா என்ற பெண்ணுக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிக்கும் நடக்கும் மோதல்தான் இந்த கதை. ’மிஸ் இந்தியா’ என்பது ஒரு பட்டம் அல்ல அது ஒரு பிராண்ட்’ என்று மிஸ் இந்தியா பட்டம் பெற்ற ஒரு கீர்த்தி சுரேஷ் அதையே பிராண்டாக மாற்றி தனது பிசினஸில் எப்படி முன்னேறுகிறார் என்பதை குறிக்கும் வகையிலான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகையர் திலகத்தின் வெற்றிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெண்ணின் மையத்திரைப்படம் இது.

முன்னைய படங்களில் இருந்த அளவு இல்லாமல் இந்த படத்திற்காக பெருமளவில் உடல் எடையை குறைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ட்ரெய்லரை பார்த்த பலர் இந்த படத்திற்காகவும் கீர்த்தி விரைவில் தேசிய விருது பெறுவார் என பாராட்டி வருகின்றனர். இந்த படம் நவம்பர் 4 அன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Keerthy Suresh