அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டாக்கிய விஜய் – மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பு – ஆனால் கேள்விக்கு உள்ளாகும் படங்களின் உண்மை தன்மை!

தளபதி விஜய் திடீரென விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் சந்திப்பை மேற்கொண்டமை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சென்னையில் நடிகர் விஜய் தனது அலுவலகத்தில் நேற்று திடீரென மக்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை, திருச்சி, குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று விஜய் சந்தித்ததாகவும் இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் குறித்த சந்திப்பு சமீபத்தில் தான் நடந்ததா என்கிற சந்தேகத்தை எழுப்பியிலுள்ளது. ஏனெனில் இந்த கொரோனா நேரத்தில் சந்திப்பில் கலந்துகொண்ட யாரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. ஆகவே குறித்த புகைப்படங்கள் சமீபத்திய புகைப்படங்கள் இல்லை என ஒரு சிலரால் தெரிவிக்கப்படுகிறது.

எது எதுவாக இருந்தபோதும் குறித்த புகைப்படங்கள் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Vijay Makkal Iyakkam organisation viral photos
Vijay Makkal Iyakkam organisation viral photos
Vijay Makkal Iyakkam organisation viral photos