சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த படம் ‘தில் பெச்சாரா’, திரைப்படம் நேற்று ஓடிடியில் ரிலீஸ் ஆனது. மேலும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். காரணம், தில் பெச்சாரா படத்தில் சுஷாந்த் சிங், ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் போன்று ஒரு நடிகராக வேண்டும் என்று ஆசைப்படும் சுஷாந்த் சிங், அவரது நண்பர் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் போன்று நடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ரஜினியின் ரசிகர்கள் தில் பெச்சாரா படத்தையும் சுஷாந்தையும் கொண்டாடி வருகின்றனர்.

Rajini Fans Celebrate Sushant Singh's Dil Bechara

Rajini Fans Celebrate Sushant Singh’s Dil Bechara