18 நடிகர்கள், 8 மணி நேரம்: ஒரே ஷாட்டில் ஒரு தமிழ்ப்படம்!

தமிழ் திரையுலகில் உருவான திரைப்படங்கள் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது என்பது தெரிந்ததே. வசனமே இல்லாத ’பேசும்படம்’, பாடல்களே இல்லாத ’அந்த நாள்’, நடிகைகளே இல்லாத ’கைதி’ ஒரே ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய ’ஒத்த செருப்பு’ உள்பட பல வித்தியாசமான திரைப்படங்கள் தமிழில் வெளிவந்து உள்ளது.

அந்த வகையில் தற்போது ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழில் உருவாகி இருக்கிறது. இந்திய திரையுலகில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ’டிராமா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

8 மணி நேரத்தில் 80 தொழில்நுட்ப கலைஞர்களுடன் 18 நடிகர் நடிகைகளுடன் உருவான இந்த படத்தை AjuKizhumala என்பவர் இயக்கியுள்ளார், கிஷோர், சார்லி, ஜெய்பாலா, நகுலன், வின்சென்ட் மற்றும் பலர் நடித்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் பேசப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Tamil cinema record movie try

Tamil cinema record movie try