சிம்புவின் அபார மாற்றம்! வைரலாகும் வீடியோ!

நடிகர் சிம்பு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக என்ட்ரி ஆகிறார் என்ற செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று காலை சிம்புவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் சிம்புவின் ஆச்சரியமான உடல் எடை மாற்றம் குறித்த வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்பு உடல் எடை அதிகரித்து இருக்கும் நிலையில் ஆரம்பித்த அந்த வீடியோவில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கடுமையான உடற்பயிற்சி மூலம் உடலை ஸ்லிம்மாக கொண்டு வருவது வரை அந்த வீடியோவின் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ மற்றும் சுசீந்திரன் இயக்கி வரும் ‘சம்பவம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

simbu on trending

simbu on trending