சூப்பர் குட் பிலிம்ஸின் 91வது திரைப்படம் – புதிய இயக்குனர் மற்றும் இரண்டு ஹீரோயின்களை வைத்து எடுக்க தீர்மானம்!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட் பிலிம்ஸ்.குறிப்பாக விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ஷாஜஹான், திருப்பாச்சி, ஜில்லா உள்பட பல வெற்றி படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தனது 91வது திரைப்படமாக இருக்கும் திரைப்படத்தில் ஜீவா நாயகனாகவும், நாயகியாக ‘காஷ்மிரா பர்தேசி’ மற்றும் ‘ப்ரக்யா நக்ரா’ ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க, படத்தை பிரபல இயக்குனர் சசி அவர்களிடம் உதவியாளராக இருந்த ‘சந்தோஷ் ராஜன்’ என்பவர் இயக்க உள்ளார். இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவொரு ரொமான்ஸ் காமெடி படம் என்றும் இந்த படத்தில் விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் சந்தோஷ் ராஜன் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை கோவை உள்ளிட்ட பகுதியில் நடைபெற உள்ளதாகவும் பிரபல மலையாள இசையமைப்பாளர் ‘ஷான் ரஹ்மான்’ இசையில் சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் இயக்குனர் மேலும் தெரிவித்துள்ளார்.

super good movies 91th movie updates

super good movies 91th movie updates