விஷாலின் ‘சக்ரா’ படத்தை திரையிடுவதற்கு நீதி மன்றத்தால் ஏற்பட்ட தடை!!

விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படம் ஓடிடியில் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய கடந்த சில நாட்களாக முயற்சித்த நிலையில் திடீரென அந்த படத்தின் மீது வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சக்ரா திரைப்படத்தை வெளியிட வேண்டுமானால் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தைச் செலுத்திவிட்டு விஷால் இப்படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் ரூபாய் 8 கோடி நஷ்டம் என்றும் அந்த பணத்தை திருப்பி கட்டியவுடன் தான் ’சக்ரா’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரவீந்திரனுக்கு ரூபாய் 4 கோடியை செலுத்த நீதிமன்றம் விஷாலுக்கு உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஷால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

vishal latest tamil cinema news

vishal latest tamil cinema news