ஜெயம் ரவியின் பூமி படத்தை வாங்கிய சன் தொலைக்காட்சி! கடைசி நேரத்தில் நடந்த திருப்பம்!!

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லக்‌ஷ்மண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பூமி’. ஜெயம் ரவி நடித்துள்ள இத்திரைப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம்தான் வாங்குவதாக இருந்ததது.

விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் விவசாயம் செய்யும் ஹீரோவாகவே நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தில் நிதி அகர்வால் நாயகியாகவும், சதீஷ் நண்பர் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமத்துள்ளார். விவசாயத்தை மையமாக கொண்டு சமூக கருத்து பேசும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது.

இப்போது தியேட்டர்கள் திறப்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்பதால், இந்த படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ‘பூமி’ படத்தை சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. தீபாவளி அன்று மாலை நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம். அதன் பின்னர் சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்க்கக் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Bhoomi movie latest tamil cinema news

Bhoomi movie latest tamil cinema news