மீண்டும் ஆதரவை இழக்கும் சுரேஷ் – நாளுக்கு நாள் மாறும் பிக் பாஸ் களம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் பிக் பாஸ் போட்டியளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி. முதலில் ரசிகர்களிடம் வில்லனாக தோன்றியவர் நாளடைவில் ரசிகர்கள் பலரின் விருப்பத்துக்குரிய போட்டியாளராக மாறினார்.

இந்நிலையில் மீண்டும் ரசிகர்கள் வெறுக்கும் ஒரு போட்டியாளராக சுரேஷ் மாறிவருகிறாரோ எனும் ஐயம் அவர்களின் ரசிகர்களிடத்தே உண்டாகியுள்ளது. காரணம் பாலாஜி முருகதாசை தொடர்ந்து சுரேசும், சக போட்டியாளர் சனம் மீது அதிக வன்மம் வைத்து செயட்பாடுவதாக தெரிகிறது.

போட்டி எனும் நிலை மறந்து போட்டியாளர் சனம் செட்டியை தொடர்ந்து சுரேஷ் வன்மம் காட்டிவருவது கடந்த சில நாட்கள் ஒளிபரப்பான காட்சிகளில் காண கூடியதாக உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக அமையவில்லை என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

bigg boss tamil 4 latest updates

bigg boss tamil 4 latest updates