ஏ.ஆர்.ரகுமானால் பல கோடி நஷ்டம் தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாபு கணேஷ் ‘ 2000 ஆம் ஆண்டு நான் செய்த கான்செப்ட் வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட்டை வைத்து இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீ மஸ்க்’ என்ற ஆங்கில படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இதை பயன்படுத்தியதற்காக அவருக்கு மெயில், கடிதம், மியூசிக் யூனியன் வாயிலாக கேட்டும் அவர் பதிலளிக்கவில்லை. என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தியது எனக்கு பெருமையாக இருந்தாலும் அவரால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தி காட்டுப்புறா படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கினேன். இதை நம்பிதான் எனக்கு பைனான்சியர்கள் பணம் கொடுத்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், இதுவரை அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதனால், கான்செப்ட் திருட்டு என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். ஆனால் அதற்கும் பதில் இல்லை. இதனால் அடுத்தகட்டமாக எப்.ஐ.ஆர் போடவுள்ளேன். இது எனக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Babu Ganesh vs a r Rahman

Babu Ganesh vs a r Rahman