சமந்தாவின் சவாலை வெற்றிகரமாக முடித்த ராஷ்மிகா மந்தனா

சமூக வலைத்தளங்களில் தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை ஏற்று நடிகர் பிரபாஸ் , நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.தொடர்ந்து இந்த சவாலை ஏற்று நடிகை சமந்தாவும் மரக்கன்றுகளை நடும் விடியோவை பதிவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து, தான் மரக்கன்றுகளை நட்டு வைத்தது போல் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது தோழி ஷில்பா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்திருந்தார் சமந்தா.

Rashmika Mandanna completed her challenge