விஜய் சேதுபதியை தொடர்புகொண்ட நாம் தமிழர் சீமான்?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 800 படத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாம தமிழர் சீமானும் விஜய் சேதுபதியை தொடர்புகொண்டு குறித்த திரைப்படத்தில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

இலங்கையின் ராஜபக்ச அரசுகளுடன் தொடர்புகளை பேணும் அனைவரையும் கடுமையாக எதிர்த்துவரும் நாம் தமிழர் சீமான், கடந்த இலங்கை தெரிதலின் போது ராஜபக்சே அரசை ஆதரித்த முரளிதான் மீது கடும் கோபத்தில் இருந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் முரளி குறித்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என எண்ணியிருந்த நிலையில் , படம் குறித்த அறிவிப்பு வந்து சீமானை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

இந்நிலையிலே நடிகர் விஜய் சேதுபதியை நேரடியாக தொடர்புகொண்ட சீமான், குறித்த திரைப்படத்தில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இது கோரிக்கையா, இல்லை மிரட்டலா என்பது தெரியவில்லை.

seeman on vijay sethupathi issue

seeman on vijay sethupathi issue