பிக் பாஸ் 4 வீட்டில் இருந்து முதலாவதாக வெளியேறும் போட்டியாளர் ரேகா!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி தொடங்கி இதுவரை இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில், முதலாவது வெளியேற்றும் படலம் சற்று நேரத்தில் இடம்பெற்று குறித்த காட்சிகள் நாளை ஒளிபரப்படவுள்ளது.

இந்நிலையில் இதுவரை கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர் ரேகா வெளியேறவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரேகாவுக்கு அடுத்ததாக ஆஜீத் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவருகிறது.

இதுகுறித்த உடனடி படப்பிடிப்பு தகவல்கள்

[Tamil Bigg Boss] ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும். மேலும் இன்றைய முதலாவது ப்ரோமோ 2.30 pm வாக்கில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் ஆரம்பவாரங்களில் ரசிகர்களின் கோபத்துக்கு உள்ளான சுரேஷ் சக்கரவர்த்தி கடந்த ஓரிரு நாட்களில் ரசிகர்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

bigg boss tamil 4 1st elimination

bigg boss tamil 4 1st elimination