பிக் பாஸ் சீசன் 4 இன் டிஆர்பி கிங் சுரேஷ் சக்கரவர்த்தி! – ரசிகர்களிடம் அதிகரிக்கும் ஆதரவு – சோர்ட் டேம்பேர் ஆன ரியோ?

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இம்முறை களமிறங்கிய போட்டியாளர்களில் பலர் வழமையான சீசன்களிலும் பார்க்க அதிகளவில் நடிப்பும், மற்றும் பொய்களை கூறிவருவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 இன் டிஆர்பி மன்னனாக சுரேஷ் சக்கரவர்த்தி களமிறங்கி இறங்கி ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

வழமையாக ஒருகுறித்த நபர்கள் பிக் பாஸ் குடும்பத்தை குழப்பினாலும், அவர்களுக்கு அதிகளவான ரசிகர்கள் இருந்ததில்லை. ஆனால் நாள் ஆக ஆக பல போட்டியாளர்களுடன் மல்லுக்கட்டும் சுரேசுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகரித்துவரும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது.

மேலும் சிலர் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் தற்போது ஒரு குழுவாக ஒன்று சேர்ந்துள்ள நிலையில், அதில் புதிதாக ரியோவும் சேர்ந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் ரியோ சோர்ட் டேம்பேர் குணத்தை வெளிக்காட்டுவது ரசிகர்களை வெறுப்புக்குள்ளாக்கி வருகிறது.

மேலும் சுரேஷ் பல போட்டியாளர்களின் முகமூடிகளை சர்வ சாதாரணமாக உடைத்தெறிந்துவருவதையும், பல இளம் போட்டியாளர்களுக்கு இதுவரை நடந்த சீசன்களிலும் எந்த வயதான போட்டியாளர்கள் கொடுக்காத நெருக்கடிகளையும் கொடுத்துவருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

மேலும் இதுவரை சுரேஷ் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பல குறும்படங்கள் மூலம் தவிடு பொடியாக்கி வரும் நிலையில், பிக் பாஸ் 4 ஐ ரசிகர்களிடம் சுவாரிசும் ஆக்கிவருகிறார் சுரேஷ். அதோடு மிக எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் மௌனம் காத்துவரும் நிலையில், பிக் பாஸ் சீசன் 4 இன் டிஆர்பி கிங் ஆக சுரேஷ் சக்கரவர்த்தி திகழ்வாரோ என கணிக்க தோண்றுகிறது.

bigg boss tamil 4 trp king suresh chakravarthi

bigg boss tamil 4 trp king suresh chakravarthi