‘இரண்டாம் குத்து’ படத்துக்கு தடை குறித்து அமைச்சர் கருத்து

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள ’இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆபாசத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் பேய்ப்படம் என்ற பெயரில் மீண்டும் ஒரு ஆபாச படத்தை கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ‘இரண்டாம் குத்து’ போன்ற படங்களுக்கு தடைவருமா என கேட்கப்பட்டதுக்கு “தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும் “தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் வலியுறுத்தப்படும். அத்தகைய படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Kadambur Raju about irandaam kuththu

Kadambur Raju about irandaam kuththu