கண் கேட்டபின் சூரிய நமஸ்காரம் – ‘இரண்டாம் குத்து’ போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்கிறார் சாம்ஸ்

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள ’இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆபாசத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் பேய்ப்படம் என்ற பெயரில் மீண்டும் ஒரு ஆபாச படத்தை கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ‘இரண்டாம் குத்து’ போன்ற படங்களில் இனி நடிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாக நடிகை சாம்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர் ““இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன்.

‘A’ படம் என்று தணிக்கைச் சான்றிதழுடன் வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன? என்று தான் இந்தப் படத்தில் நடித்தேன். ஆனால், இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தைக் காப்பாற்றும் பொருட்டும், இனி ‘இரண்டாம் குத்து’ போன்ற நேரடி அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன். தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து” என தெரிவித்துள்ளார்.

Irandam kuththu's chaams latest updates

Irandam kuththu’s chaams latest updates