விரைவில் ஓடிடியில் களமிறங்கப்போகும் கமலஹாசன்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை தொடர்கிறது.

இந்நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது குறித்து முடிவெடுக்கமுடியாத நிலையில், ஓடிடி பிளாட்பாரத்தில் திரைப்படங்கள் , குறும்படங்கள், வெப்தொடர்கள் என திரைத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஓடிடி என்ற பெயரை அனைவரும் இவ்வளவு தூரம் அறியும் முன்னரே தனது ’விஸ்வரூபம்’ படத்தை டிடிஎச் என்ற ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சி செய்தவர் நடிகர் கமலஹாசன். அந்த வகையில் தற்போது அவர் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த படத்திற்கான திரைக்கதையை கமல்ஹாசன் எழுத்து முடித்துவிட்டதாகவும், விரைவில் குறைந்த நடிகை நடிகர்களுடன் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை ஓடிடி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கமல் நடிக்கிறாரா? அல்லது இயக்குகிறாரா? என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.

Kamal Haasan

Kamal Haasan Also On Ott Soon