இறங்கிவந்த விஷால், மீண்டும் இணையும் மிஷ்கின் – விஷால் கூட்டணி?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த துப்பறிவாளன் படத்தின், 2ம் பாகத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்த மிஷ்கின்-விஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. இதனிடையே விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விளக்க, மீதி படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கி பேசிவந்தனர்.

இதனிடையே துப்பறிவாளன் 2 படத்தில் எஞ்சியுள்ள காட்சிகளை எடுக்க விஷால் தயாராகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மிஷ்கினை மீண்டும் அழைத்து மீதி படத்தை இயக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவி வருகிறது. மிஷ்கின் இயக்கினால் தான் படம் சிறப்பாக இருக்கும் என விஷால் கருதுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Again Vishal And Mysskin joins

Again Vishal And Mysskin joins