தொடர்ந்து ப்ரோமோ ப்ரோமோ என்று சொல்லியே அடிக்கடி ப்ரோமோவில் வந்து ரசிகர்களை சலிப்படைய வைக்கும் அனிதா!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வழமைக்கு மாறாக இம்முறை 2 நாட்களுக்கு உள்ளாகவே போட்டியாளர்கள் மோதிக்கொள்ளும் நிலைமை பிக் பாஸ் வீட்டினுள் உருவாகியுள்ளது.

சாந்தமாக கருதப்பட்ட அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்கரவத்திக்கும் இடையில் உருவாகியுள்ள சர்ச்சை இன்றும் தொடர்ந்துள்ளது.

யார் பக்கம் சரி , பிழை என்பதற்கு அப்பால் தனது கருத்துக்களை முன்வைக்காத அனிதா தொடர்ந்து ப்ரோமோ குறித்தே பிக் பாஸ் வீட்டினுள் பேசி வருவது ரசிகர்களை சலிப்படைய வைத்துள்ளது.

அனைத்து போட்டியாளர்களும் வெற்றிபெறுவதட்கு திட்டங்களுடன் வந்துள்ள போதும், அனிதா கையில் எடுத்திருக்கும் முறையே அவருக்கு இருந்த ரசிகர் கூட்டத்தை அதிருப்தி படுத்தியுள்ளது.

தொடர்ந்து ப்ரோமோ குறித்து பேசிவரும் அனிதாவே எப்போதும் ப்ரோமோவில் வருவது அதிக ரசிகர்களை கொண்ட மற்றைய போட்டியாளர்களின் ரசிகர்களை கோபமூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக தற்போதைய நிலையில், சில காலம் சுரேஷ் மீது சவாரி செய்து அடிக்கடி ப்ரோமோவில் வரும் யுக்தியை அனிதா கையாண்டு வருகின்றமை தெளிவாக தெரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

anitha sampath bigg boss tamil 4

anitha sampath bigg boss tamil 4