ஒரே நேரத்தில் பல மொழிகளில் உருவாகும் தனுஷின் படம்

நடிகர் தனுஷ் அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அதட்கு அடுத்ததாக 2018 ஆம் ஆண்டு ’ராட்சஸன்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் திரைக்கதையை முழுமையாக ராம்குமார் தயார் செய்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Dhanush Next With Ram Kumar

Dhanush Next With Ram Kumar