வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு கேன்சரால் உயிரிழந்த இளம் நடிகை

கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 29 வயது இளம் நடிகை திவ்யா சௌக்சி, இறப்பதற்கு முன் பதிவிட்ட சமூக வலைதள பதிவு ரசிகர்களை இன்னும் கவலையடையவைத்துள்ளது.

நடிகை திவ்யா சௌக்சி, ஹே அப்னா தில் தோ அவாரா உள்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்த திவ்யா சௌக்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 29.

திவ்யா சௌக்சி மரணம் அடைவதற்கு முன்னால் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் “நான் மரண படுக்கையில் இருக்கிறேன். ஆனாலும் உறுதியாக இருக்கிறேன். வலி இல்லாத இன்னொரு வாழ்க்கை கிடைக்கட்டும்” என பதிவிட்டமை ரசிகர்கள் மனதை உருக்கமடையவைத்துள்ளது.

Divya Chouksey Last Statement

Divya Chouksey Last Statement