ரஜினியை கிண்டல் செய்து படமெடுக்கும் ராம்கோபால் வர்மா?

பிரபல தெலுங்கு நடிகர் ராம்கோபால் வர்மா தற்போது ’ஆர்ஜிவி மிஸ்ஸிங்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது இந்த படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள போஸ்டர் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற ஒருவர் இருப்பது ரஜினியை கிண்டல் செய்து ராம் கோபால் படமெடுப்பதாக சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராம் கோபால் ’ஆர்ஜிவி மிஸ்ஸிங்’ படத்தின் புதிய நடிகர் கஜினிகாந்த். வேறு யாராது ஒருவரின் சாயல் தெரிந்தால் அது முற்றிலும் தற்செயலானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இத்திரைப்படத்தின் முந்தைய போஸ்டர்களில் சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர் சாயலில் இருந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ram Gopal Varma Vs Rajini – Ram Gopal Varma Vs Rajini