இன்னொரு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ உருவாகிறது – சரண்யா பொன்வண்ணன்!

விஜய் சேதுபதியின் ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் சரண்யா பொன்வண்ணன்.

இந்த நிலையில் தற்போது அவர் அறிமுக நடிகர் நடித்து வரும் ராஜா நடித்து வரும் ’அருவா சண்டை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் ராஜாவின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சரண்யா “கடந்த சில வருடங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது. விஜய்சேதுபதியுடன் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நடிக்கும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இந்தப் படத்தில் நடிக்கும்போது கிடைத்தது. ராஜா இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்..

படத்திற்கு டப்பிங் பேசும்போது நான் என்னை அறியாமலே கண் கலங்கி விட்டேன். இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தைரியமாக தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்துள்ள ராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Aruva Sanda

Aruva Sanda movie updates