இளைய தலைமுறையிடம் காம வக்கிரங்களை விதைக்கும் ‘இரண்டாம் குத்து’ – திரை ரசிகர்கள் கடும் கண்டனம்

கண்டவன் எல்லாம் படமெடுக்க வந்தால் சினிமாவின் எதிர்காலம் இதுதான்

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய ’ஹரஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ ஆகிய இரண்டு சர்ச்சைகளுக்குரிய திரைப்படங்கள் இளைஞ்சர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் ’இரண்டாம் குத்து’ என்ற பெயரில் வெளிவரவுள்ளது.

ஏற்கனவே நாம் தெரிவித்தபடி தமது திரையுலக எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கறை கொண்ட பல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்க மறுத்த நிலையில், திரைப்படத்தின் இயக்குனரே இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகையில், படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டீஸரின் ஆரம்பத்திலேயே விஜய், விஜய் சேதுபதியின் குட்டிக் கதைகளை ஒப்பிட்டு ஒரு வசனம் ஆபாசம் கலந்து உள்ளது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதில் “இது விஜய், விஜய்சேதுபதி சொன்ன குட்டிக்கதை அல்ல, பல குட்டிகளை போட்டவனோட கதை’ என வருகிறது.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆபாசத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் பேய்ப்படம் என்ற பெயரில் மீண்டும் ஒரு ஆபாச படத்தை கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனன்ர்.

இருப்பினும் சந்தோஷ் ஜெயக்குமாரின் மற்ற இரண்டு படங்களைப் போல இந்தப் படங்களும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை தாண்டி, இத்திரைப்படத்தை திரையிட அரசு [தணிக்கை குழு] அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

irandam kuththu teaser review

irandam kuththu teaser review