வெப் தொடரில் களமிறங்கும் மக்கள்செல்வன் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, அடுத்து வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர், நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி , பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா ஆகியோர் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ள நிலையில்,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி வெப் தொடரில் அறிமுகமாக உள்ளதாக சமீபத்திய செவ்வி ஒன்றின் போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த வெப் தொடரை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.

Vijay Sethupathi on Web series

Vijay Sethupathi on Web series