திரையரங்குகளை மீண்டும் திறக்க மத்திய அரசு வெளியிட்டுள்ள நிபந்தனைகள் முழு விவரம் இதோ

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட திரையரங்குகளை அக்டோபர் 15ம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்றும், 50% பார்வையாளர்கள் மட்டுமே இருக்கவேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் ல் தற்போது திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய முழு விபரங்களை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

அதன்படி

  1. திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி உடன் சுத்தம் செய்யவேண்டும், ஒரு காட்சி முடிந்தவுடன் அடுத்த காட்சி தொடங்கும் முன் கட்டாயம் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  2. 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அனுமதிக்கலாம்.
  3. ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
  4. பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை மட்டுமே திரையரங்கில் விற்க வேண்டும்.
  5. திரையரங்கிற்குள் வரும் ரசிகர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை உறுதிப்படைத்த வேண்டும்.
  6. 6.ரசிகர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதித்த பின்பே, திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.