யோகிபாபுவுக்கு கவுண்டமணி சொன்ன அட்வைஸ்

கவுண்டமணி சொன்ன அட்வைசின் படி தான் இதுவரை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார் தமிழ் திரையுலகின் முன்னணி நகைசுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு.

யோகிபாபு மூத்த காமெடி நடிகர்கள் பற்றி கருத்து தெரிவிக்கும் போது”எல்லாரையும் சந்தித்து பேசும் போது, பலர் பல விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்காங்க. குறிப்பா, கவுண்டமணி சார் சொன்ன ஒரு அறிவுரையைத்தான் இப்போவரைக்கும் கடைபிடித்து வருகிறேன்.

முதல்முறை அவரை சந்தித்தபோது, ‘தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க. உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்’னு சொன்னார்.

அந்த அறிவுரையையே இதுவரை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார் யோகி பாபு.

Yogi Babu about Goundamani

Yogi Babu about Goundamani