போட்டி இன்னும் முடியவில்லை – இறுதி போட்டியில் நாம் இருப்போம் – நம்பிக்கை தெரிவிக்கும் முன்னணி நடிகை

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் இறுதி வரை போராடிய தோனி துபாயின் அதிக வெப்பநிலை மற்றும் சோர்வு காரணமாக ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார்.

மேலும் நேற்றைய போட்டியில் தோனி எடுத்த சில முடிவுகள் சர்ச்சைக்குரியவையாக கருதப்படுகிறது.

தோனியின் மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தாலும் தோனியின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வரலட்சுமி “நாங்கள் எப்போதும் உங்கள் மீது அன்பு செலுத்துவோம். உடல்நலக் குறைவாக இருந்த போதிலும் நீங்கள் அணியின் வெற்றிக்காக போராடினீர்கள். இருப்பினும் இன்னும் போட்டி முடியவில்லை. நாம் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு செல்வோம். தைரியமாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Varalaxmi Sarathkumar supports to csk