விஜய்சேதுபதி படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ’க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது டாப்ஸியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடந்துவரும் நிலையில், படப்பிடிப்பு அக்டோபர் ஐந்தாம் தேதி முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஏற்கனவே யோகிபாபு, ரமேஷ் திலக், சுப்பு பஞ்சு, மதுமிதா, தேவதர்ஷினி உள்பட ஒருசில காமெடி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல தெலுங்கு காமெடி நடிகரான வெண்ணிலா கிஷோர் இணைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

another comedy actor joins with vijay sethupathi movie

another comedy actor joins with vijay sethupathi movie