சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ஆனார் மனோபாலா

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு இருந்த சிக்கல்களை தொடர்ந்து தற்போது புதிய தலைவராக நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவி வர்மா என்பவர் மிகப்பெரிய அளவில் பண மோசடி செய்ததாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டிவந்த நிலையில், சங்க விதிகளின்படி ரவிவர்மாவை தலைவர் பதவியிலிருந்து நீக்கி இருப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரிஷிகேஷ் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக ஒருமனதாக நடிகர், இயக்குனர் மனோபாலா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Manobala latest news updates