கைமாறிய தளபதி 65 படத்தயாரிப்பு – அதிரிச்சியில் முன்னணி நிறுவனம்?

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நடிகர் ரஜினிகாந்த் போன்று நடிகர் விஜய்யின் தளபதி 65 சம்பளத்தையும் குறைக்க கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு விஜய் மறுப்பு சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் கோரிக்கைக்கு உடன்படாத விஜய், சினிமா பழைய நிலைக்கு திரும்பிய பிறகு உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன் என விலகி விட்டார் என கூறப்படுகிறது. மேலும் உடனடியாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியிடம் அந்த வாய்ப்பு சென்றுள்ளது என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேனாண்டாள் பிலிம்ஸ் விஜய் கேட்ட சம்பளத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எப்படியும் விஜய் வழிக்கு வருவார் என எதிர்பார்த்த சன் நிறுவனம், இந்த தகவல்களை அறிந்துகொண்ட பின் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Thalapathy 65 Producer Changed

Thalapathy 65 Producer Changed