பிரபல நடிகர் வெளியிட்ட தல அஜித்தின் வீடியோ

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த தல அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்த அஸ்வின் காகுமானு, சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட தல அஜித்தின் வீடியோ வைரலாகிவருகிறது.

அஸ்வின் காகுமானு தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏரோமோடெல்லிங் துறையில் அர்வமுள்ள தல அஜித்தின் முன்னைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர்

“பல ஆண்டுகளுக்கு முன்பு, அஜித் சார் மற்றும் அரவிந்த் சார் (தீனாவின் DoP) ஆகியோரின் ஏரோமோடெல்லிங் இல் பங்குபெற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சிறிய வீடியோ அந்த சந்தர்ப்பத்தில் ஒரு பார்வை. பல ஆண்டுகளாக வணிக ட்ரோன்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்பது சுவாரஸ்யமானது.’ என பதிவிட்டுள்ளார்.

Ajith kumar New Viral Video