கவுதம் மேனனிடம் இருந்துவந்த புதிய அறிவிப்பு

ஒருபுறம் கொரோனா வைரஸால் திரையுலகம் முடங்கியிருந்தாலும், மறுபுறம் பல திரைத்துறை சார்ந்தவர்களின் புதிய அறிவிப்புக்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

தனுஷ் மெகா ஆகாஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டாவை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன், அடுத்து வருண், ராஹேய் நடித்துள்ள “ஜோஷ்வா இமை போல் காக்க” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் இக்கால பகுதியில் வெளியிட எதிர்பார்க்கப்பட்ட போதும், கொரோனா முடக்கத்தால் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் பின்னணி பாடகர் கார்த்திக் முதல் முறையாக இசையமைக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய ‘நான் உன் ஜோஸுவா” பாடல் வரும் 16ம் திகதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

Gautham Vasudev Menon New Updates