அட்லீ படத்தில் இரட்டை வேடத்தில் ஷாருக்கான்

தமிழ் திரையுலகில் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள அட்லீ, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியாக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shahrukh Khan and Atlee Movie updates

Shahrukh Khan and Atlee Movie updates