பாலா செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் மிஷ்கின் டுவிட்

பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் பாலா தயாரிக்க, மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், ‘பிசாசு.’

பிசாசு படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்திற்கு இசை கார்த்திக் ராஜா.

இந்நிலையில், பாலாவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘பிசாசு’ டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

அதில் “நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா. ‘பிசாசு 2’ இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

director Mysskin thanks to director Bala