அனுஷ்காவுக்கு உதவி செய்த விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ள ‘சைலன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உதவி செய்துள்ளார்.

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைலன்ஸ் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

vijay sethupathi latest news