ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ்க்கு சவால் விடுத்த நடிகை சமந்தா

சமூக வலைத்தளங்களில் தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை ஏற்று நடிகர் பிரபாஸ் , நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.தொடர்ந்து இந்த சவாலை ஏற்று நடிகை சமந்தாவும் மரக்கன்றுகளை நடும் விடியோவை பதிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, தான் மரக்கன்றுகளை நட்டு வைத்தது போல் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது தோழி ஷில்பா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்திருக்கிறார் சமந்தா.

Samantha Akkineni Green India Challenge
Samantha Akkineni Green India Challenge

Samantha Akkineni Green India Challenge