களைக்கட்டுமா பிக் பாஸ் சீசன் 4? – நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பலர் தயங்குவதால், களமிறக்கப்டும் அதிகளவு விஜய் டிவி பிரபலங்கள்

கமல் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக அதிகளவு திரைத்துறையை சேர்ந்தவர்களே பங்குபற்றி வந்த நிலையில், தற்போது பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்து வருவதால், பிக் பாஸ் சீசன் 4 இல் அதிகளவில் விஜய் டிவி பிரபலங்கள் களமிறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கந்துகொண்ட பல திரை பிரபலங்கள் தம் புகழை இழந்ததால், புதிய போட்டியாளர்களாக கலந்துகொள்ள பல திரைத்துறையினர் பின்னடித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 4 இல் இதுவரை விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்த ரக்சன், ஆஜித் மற்றும் விஜய் டிவியில் தற்போது இருக்கும் ரம்யா பாண்டியன், ஷிவானி என பட்டியல் நீண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 1 ஐ தவிர்த்து அடுத்த சீசன் அனைத்தையும் கமல் ஒருவருக்காகவே ரசிகர்கள் பார்த்துவரும் நிலையில், தொடர்ந்து தொலைக்காட்சியில் பார்த்துவரும் அதே முகங்கள் இம்முறை அதிகளவில் களமிறங்குவதால் நிகழ்ச்சியில் சலிப்பு தன்மை ஏட்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

bigg boss tamil 4 review

bigg boss tamil 4 review