தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்கள் போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார் – ஸ்ரீரெட்டி

இந்திய திரையுலகில் போதை பொருள் புழக்கம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்கள் போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் “இதுபோன்ற பார்ட்டிகள் அதிகம் அங்கு நடைபெறுகிறது. அங்கே போதை பொருட்களை சர்வசாதாரணமாக புழங்கப்படுகிறது. பார்ட்டிக்கு வரும் பெண்களுக்கு போதை கொடுத்து பாலியல் பலாத்காரம் கூட நடைபெறுகிறது. எனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால் போதை பொருட்களை பயன்படுத்து யார் என்ற விபரங்களை வெளியிட தயார் ” என கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri Reddy

Sri Reddy latest news updates