பிக் பாஸ் போட்டியாளர்களுக்கான சம்பளம் இம்முறை குறைப்பு ?

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக யார் யார் போட்டியில் கலந்து கொள்ளக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியுள்ளது.

மேலும் இம்முறை நிகழ்ச்சியில் கமலின் அரசியல் சாடல்களும் மிகவும் மேலோங்கி நிற்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

இந்நிலையில் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான சம்பளத்தொகை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வருமான குறைவு காரணமாகவே இவ்வாறு சம்பள குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆயினும் வெற்றியாளருக்கான வெற்றித்தொகையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

tamil bigg boss 4 contestant salary details

tamil bigg boss 4 contestant salary details