மாற்றுத்திறனாளியாக நடிக்கும் சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அடுத்த படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்க உள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.

இதில் வாய்பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக சமந்தா நடிக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை சமந்தா “வாழ்க்கையில் புது புது சவால்களை ஏற்றால்தான் நமக்குள் உள்ள திறமை வெளியே வரும். அடுத்த படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே மகாநதி படத்தில் திக்குவாய் பெண்ணாக நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாக எனக்கு பாராட்டுகள் கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.

Samantha Akkineni new movie updates

Samantha Akkineni new movie updates