அடுத்து கமலுடன் லோகேஷ் கனகராஜ், படத்தின் டைட்டில் இதுதானாம்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த திரைப்படம் குறித்த தகவலை இன்று மாலை அறிவிக்கவுள்ளார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திரைப்படத்துக்கு ’எவனென்று நினைத்தாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளான இந்த வரிகளே லோகேஷின் அடுத்த பட டைட்டில் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வலம்வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது ஒரு அரசியல் கலந்த திரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது.

Lokesh Kanagara with kamal

Lokesh Kanagara with kamal